கடற்கன்னிகள்


முதலில் கடல் கன்னிகளின் உடல் அமைப்பைப் பார்க்கலாம். கடல் கன்னிகளின் உருவம் இடுப்பு வரை ஒரு பெண்ணைப் போலவே இருக்கும். இடுப்புக்குக் கீழ் மீனின் வால் பகுதியைக் கொண்டிருக்கும். இதே போல் கடல் கண்ணன்களும் [ஆண் பால்:)] இருப்பதாக கேள்வி.

கிரேக்க நாட்டு சரித்திரத்தில் கடல் கன்னிகளைப் பற்றிய நிறைய விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் அந்த நாட்டு அரசனான அலேக்சண்டேரின் தங்கை இறந்தவுடன் கடல் கன்னியாக உருப்பெற்றதாக அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். இன்னமும் அவள் இருப்பதாகவும், யாரேனும் கடல் பிரயாணிகளைக் கண்டால் என் அண்ணன் அலேக்செண்டேர் உயிருடன் இருக்கிறானா என்று கேட்பதாகவும் அதற்கு இல்லை என்கிற பதில் வந்தால் அந்தப் பிரயாணிகளையும் அவர்கள் வந்த கப்பலையும் அவள் நாசம் செய்வதாகவும் நம்புகிறார்கள். இது மட்டுமல்லாமல் எகிப்தியர்களும் இந்த கடல் கன்னிகளுக்கு மரியாதை கொடுப்பதற்காகவே மீன் போன்ற கடல் உணவுகளை உண்பதில்லையாம்.

இந்த கடல் கன்னிகள் கடலில் வாழ்வதற்கு ஏற்ற உடல் உறுப்புகளை பெற்று இருந்தாலும் இவர்கள் பூமியில் வாழ்கின்ற ஆணுடன் கலந்து குழந்தையும் பெற்றுக் கொள்ள முடியுமாம். அப்படி பிறக்கின்ற குழந்தையும் கடலில் வாழ்வதற்கு ஏற்ற உடல்வாகை பெற்றிருக்கும் என்பது தெரிய வருகிறது. கடல் கன்னிகளுக்குக் கடலுக்கடியில் ராஜ்யம் இருப்பதாகவும் கூட சொல்கிறார்கள். இந்த ராஜ்யத்தில் கம்யுனிஸ்ட் ஆட்சி நடப்பதாகவும் இங்கு பணம், உடை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும் அரேபிய கதைகள் கூறுகின்றன.
இனி பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு இந்த கடல் கன்னிகளின் பங்களிப்பு என்னவாக இருக்க முடியும் என்று பார்க்கலாம். மனிதர்களில் பலர் கடல் பிரயாணம் மேற்கொள்கிறார்கள் அல்லவா? நடுக்கடலில் இவர்களுக்கு கன்னிகளின் இனிமையான கானங்களும் பேச்சுக்குரல்களும் கேட்குமாம். அப்படி அதன் பின் செல்பவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போவார்களாம். இதற்கு நிறைய சாட்சிகளும் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் சில பேராசை பிடித்த மனிதர்கள் கேட்கும் வேண்டுகோளை இந்த கடல் கன்னிகள் நிறைவேற்றுவதாகவும் அறிகிறேன். அப்படி அவர்களின் பேராசையை நிறைவேற்றும் பட்சத்தில் அதற்கு இணையாக ஓர் உயிரை பலியாக கேட்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதெல்லாம் உண்மையாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கு மலேசியாவில் உள்ள பங்கோர் எனப்படும் ஒரு தீவில் மீனவர்கள் இந்த கடல் கன்னிகள் தங்களுக்கு பல விதத்தில் உதவி செய்வதாக கூறுகிறார்கள் என நம் பதிவர், நண்பர் விக்கினேஷ்வரன் கூறுகிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில், சுனாமியின் பொழுது கடலோரத்தில் இறந்து கிடந்த ஒரு கடல் கன்னியின் புகைப்படம் தனக்கு கிடைத்ததாகவும் கூறினார்.
இதுப்பற்றி மேலும் விவரம் அறிந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே..

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement