முள்நாரிப்பழம் தெரியுமா

இந்தப் பழம் பார்த்திருக்கிறீர்களா நண்பர்களே? ரம்புத்தான் என்றழைக்கப்படும் இதனை முள்நாறிப் பழம் என்றும் அழைக்கலாம் என்று ஒரு தமிழாசிரியர் சொன்னார். அது எந்த அளவுக்கு உண்மையென எனக்குத் தெரியவில்லை. 'ரம்புத்தான்' எனப்படும் சொல்லில் உள்ள 'ரம்புட்' எனும் மலாய் சொல்லுக்கு முடி என்று அர்த்தம். இப்பழத்தின் மேல் முடி போன்று உள்ளதால் இதற்கு இந்தப் பெயர் வந்ததாக கூறுகிறார்கள். மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கக்கூடிய இப்பழம் பெரும்பாலும் கிழக்காசிய நாடுகளிலேயே அதிகம் விளைகிறது. பூமத்திய ரேகையின் மிதமான வானிலையே இதற்குக் காரணமாகும். பெரும்பாலும் மே, ஜூன், ஜுலை மாதங்களில் மிகவும் வழக்கமாக சந்தைகளில் கிடைக்கக்கூடிய பழங்களில் இதுவும் ஒன்று. இப்பழத்தின் சுளை வெண்மையாகவும், சுவை இனிப்பாகவும் இருக்கும்.

'லைச்சி' பழ குடும்பத்தைச் சேர்ந்த ரம்புத்தான் பழ மரத்தைப் பயிரிடுவது மிக எளிதான ஒன்றே. நீங்கள் சாப்பிட்ட பழத்தின் விதையை பயிரிட்டாலே சில தினங்களில் முளையைப் பார்க்கலாம். இம்மரமானது சுமார் 10 முதல் 20 மீட்டர் உயரம் வரை வளர கூடிய தன்மை வாய்ந்தது.
ரம்புத்தான் பழத்தை அப்படியே பழமாகவும், 'ஜெல்லி' செய்தோ சாப்பிட சுவையாக இருக்கும். வெறும் சுவை மட்டுமில்லாமல் இதில் சில மருத்துவ குணங்களும் அடங்கியிருப்பது ஆச்சிரியமே. இதில் பத்து சுளைகளை எடுத்து 3 குவளைத் தண்ணீர் விட்டு, 1 1/2 குவளை வரும் வரை கொதிக்க வைத்து அருந்தினால் எப்படிப்பட்ட சீதபேதியும் குணமாகும் என்கிறார்கள் அறிந்தவர்கள். அதோடு இந்தப் பழமானது உடல் எடையைக் குறைக்கவும் மிகவும் உதவுவதாக சொல்கிறார்கள். சாப்பிட்டுதான் பாருங்களேன்!

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement