உங்கள் முளை எந்தப்பக்கம்

ஒவ்வொரு மனிதனின் மூளைக்கும் இருவேறு பக்கங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இரண்டு பகுதிகளும் வெவ்வேறு குணாதிசியங்களைக் கொண்டவை. வலது மூளை மற்றும் இடது மூளை என அறியப் படும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளும் முற்றிலும் வேறுபட்ட விதமான பணிகளை செய்கின்றன என்றாலும் இந்த இரண்டு பகுதிகளில் ஒரு பகுதி மற்ற பகுதியை ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனின் எந்த பகுதி மற்ற பகுதியை ஆக்கிரமிப்பு செய்கிறது என்பதின் அடிப்படையில் அவனது குணாதிசியங்கள் மாறுபடக் கூடும். உங்கள் மூளையின் எந்த பகுதி அதிகம் வேலை செய்கிறது அல்லது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே.

கீழே சில கேள்விகள் கொடுக்கப் பட்டுள்ளன. உங்கள் பதில்களை தனியாக குறித்து வைத்துக் கொள்ளவும். இந்த விடைகளில் சரியானது என்றோ தவறானது என்றோ ஏதுமில்லை. உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக இந்த கேள்வி-பதில்கள் இல்லை. எனவே உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகின்றதோ, சாதாரணமான மனநிலையில் எந்த விடையை அளிப்பீர்களோ அந்த பதிலையே தாருங்கள், அது போதும். அப்போதுதான் நமது மனநிலையை நாமே சரியாக புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி எண் 1:

நீங்கள் எப்படிப் பட்ட மனிதர்?

அ. மற்றவர்கள் எளிதில் ஊகிக்கக் கூடிய வகையில் எனது நடவடிக்கைகள் இருக்கும்.
ஆ. சமயத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்வேன்.

கேள்வி எண் 2.

A = AM என்பது கீழ்கண்டவற்றில் எதனுடன் பொருந்தும்?

அ. P = PM
ஆ. HA = HAM

கேள்வி எண் 3

"வடக்கு - தெற்கு" என்பது எந்த இணையுடன் பொருந்தும்

அ. மேலே - கீழே
ஆ. கிழக்கு - மேற்கு

கேள்வி எண் 4.

15 மற்றும் 6 ஆகிய எண்களுக்கு உள்ள ஒற்றுமை கீழ்க்கண்ட இணைகளில் எதற்கு உள்ளது.

அ. 23 & 5
ஆ. 23 & 14

கேள்வி எண் 5.

"வேலை - விளையாட்டு" கீழ் கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. கட்டுப்பாடு - கட்டுப்பாடு இல்லாத நிலை
ஆ. தேவையான ஒன்று - தேவையில்லாத நிலை

கேள்வி எண் 6.

"கோபம் - குரோதம்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. மோசம் - மிக மோசம்
ஆ. அன்பு - காதல்

கேள்வி எண் 7

"தங்கம் - மஞ்சள்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. ராமர் - நீலம்
ஆ. எவர்சில்வர் - வெள்ளை

கேள்வி எண் 8:

"I - M " என்பது கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. U - R
ஆ. 9 - 13

கேள்வி எண் 9

நீங்கள் (அதிகம்) எப்படிப் பட்ட மனிதர்?

அ. நான் மற்றவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவேன்
ஆ. எனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பேன்

கேள்வி எண் 10

உங்களுக்கு அதிகம் பிடித்தது?

அ. உருவாக்கும் திறன்
ஆ. தெளிவான மனநிலை

இப்போது உங்கள் விடைகளை சரிபாருங்கள்.

உங்கள் விடைகளில் அதிகம் "அ" விடை வந்திருந்தால் உங்கள் வலது மூளையின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பொருள். மாறாக "ஆ" என்று இருந்தால் இடது மூளை அதிகம் வேலை செய்கிறது என்று பொருள்.

இப்போது மூளையின் ஆதிக்கம் குறித்த பலன்களை பார்ப்போம்.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள், கலைத் திறமை, கற்பனைத் திறன் போன்றவற்றை அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள், கலைஞர்களாக அதிகம் வெற்றி பெறுவார்கள். வேகமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம், பல சமயங்களில் முன் யோசனை இல்லாத முடிவுகளையே எடுத்திருப்பார்கள். "எமோஷன்" மனநிலை அதிகம் கொண்டிருப்பார்கள். சொல்ல வந்த விஷயத்தை இவர்களால் சரியாக சொல்ல முடியாது.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள் சற்று நிதானமாக யோசித்து முடிவு செய்ய பழகிக் கொள்வது பல பிரச்சினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றும்.

இடது பக்க மூளை உள்ளவர்கள் மிகவும் நிதானித்து தர்க்க ரீதியான முடிவு எடுக்கக் கூடியவர்கள். இவர்கள் தொழிற் முறை வல்லுனர்களாக வெற்றி பெறுவார்கள். அதே சமயம் "கலை" உணர்ச்சி இவர்களிடம் சற்று குறைவாகவே இருக்கும். ஒருவித "இயந்திர ரீதியான" வாழ்வு முறையை இவர்கள் கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களால் அதிகம் விரும்பப் பட மாட்டார்கள்.

இடது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள் ஓய்வு நேரத்தில் தங்கள் கவனத்தை "உருவாக்கும் திறனை வளர்க்கும் பொழுது போக்கு அம்சங்களில் (உதாரணமாக வரைதல், எழுதுதல்)" செலுத்தினால் அவர்கள் மன நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும்.

உருவாக்கும் திறன் மற்றும் தர்க்க ரீதியான சிந்தனை இரண்டும் சரியான விகிதத்தில் இணைந்தாலே ஒருவரின் மூளை சரியாக செயல் படும். அவர் தொழில் ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் வெற்றி பெற முடியும்.

ஒன்றில்லாத மற்றொன்று உபயோகமில்லாதது. எனவே, உங்களது மூளையில் எந்த பகுதியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை சரியாக உணர்ந்து கொண்டு, உங்களை நீங்களே திருத்தி அமைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் வெற்றி காணுங்கள்

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement