பிறருக்கு உதவுங்கள்

ஒரு சின்ன கதையோட ஆரம்பிப்போமா?

சொர்க்கம் நரகம் இரண்டிலும் அன்று காலை உணவு வழங்கப்பட்டது.சொர்க்கம் நரகம் இரண்டுக்குமே ஒரே மாதிரியான பழ உணவு வகைகள்.சொர்க்கத்தில் உண்டவர்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர். நரகத்தில் உண்டவர்கள் எல்லாம் மிகவும் களைப்புடன் உள்ளே சென்றது போலவே திரும்ப வந்தனர் மிகவும் களைப்புடனும் காணப்பட்டனர்.இதைக்கண்ட கடவுள் ஏன்? இவர்கள் இரு பிரிவினருக்கும் ஒரே மாதிரியான உணவுதானே வழங்கப்பட்டது சொர்க்கத்தில் இருப்பவர்கள் மிக மகிழ்ச்சியுடன் வருகின்றனர் நரகத்தில் இருந்து வருபவர்கள் மிக களைப்புடன் காணப்படுகின்றனரே என எண்ணியவாறு இன்று மதிய உணவு வேளையின் போது உணவுக்கூடத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று தனக்குள் கூறியவாறு சென்றார்.

(குறிப்பு: சொர்க்கம், நரகம் இரண்டில் இருப்போரின் முழங்கை மடக்க முடியாதவாறு கட்டப்பட்டிருக்கும்)

மதிய உணவுக்கான நேரம் வந்தது இம்முறையும் சொர்க்கவாசிகள், நரகவாசிகள் இருவருக்கும் ஒரே மாதிரியான பழங்கள் உணவாக படைக்கப்பட்டது.கடவுள் முதலில் நரகவாசிகள் உணவுக்கூடத்திற்க்கு சென்றார் அங்கு ஒவ்வொருவரும் பழத்தை மேலேதூக்கிபோட்டு அன்னாந்து வாயில் பிடிக்கும் வித்தை செய்துகொண்டிருந்தனர் ஒருவராலும் பழங்களை சரியாக உண்ணமுடியவில்லை கைகள் கட்டப்பட்டுருப்பதால்.பழங்கள் அங்கொன்று இங்கொன்றாக சிதறி வீணாய் சென்று கொண்டிருந்தது.ஒஹோ இது தான் விசயமா என்று எண்ணியவாரே கடவுள் சரி சொர்க்கத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்ப்போம் என்று சொர்க்க உணவுக்கூடத்திற்க்கு சென்று பார்த்தார் ஆச்சர்யம் அங்குள்ள மக்கள் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொண்டு உணவுகளை மகிழ்ச்சியாக உண்டனர்.இதைக்கண்ட கடவுள் இவர்கள் சொர்க்கத்திற்க்கு வந்தது சரிதான்,அவர்கள் நரகத்திற்க்கு சென்றது சரிதான் என எண்ணிக்கொண்டார்.

இதிலிருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வதினால் மிக மகிழ்ச்சியாய் இருக்க முடியும் என்று தெரிகிறது.




சின்ன புள்ளைல அம்மா சொல்லுவாங்க உன்னைய பெத்ததுக்கு அம்மிக்கல்ல பெத்துருக்கலாம் இல்லைன்னா தென்னம்பிள்ளைய பெத்துருக்கலாம் அதுங்க கூட உதவும் நீ உதவ மாட்டேன்றியேன்னு...முதல்ல அம்மா அப்பாவுக்கு உதவியா இருங்க அம்மாவுக்கு வீட்டு வேலைகளில்அப்பாவுக்கு தொழிலில் உதவியா இருங்க உதவியா இல்லாட்டினாலும் உபத்திரமா இருக்காதீங்க...



உதவி பண்ணுங்க....

1.துடுப்பு கூட உதவி பண்ணுகிறது ஓடம் செல்வதற்க்கு..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..


2.புல்லாங்குழலும் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..


3.ஏணியும் கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றிவிட.....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..


4.மரம் கூட நிழல் தந்து நமக்கு உதவுகிறது...எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்...


ரோட்டுல விபத்துல அடிபட்டிருப்பவரை பார்த்து உச்சு கொட்டுவதை நிறுத்துங்கள் முதலுதவி பண்ணுறவரை தடுக்காதீங்க அதுவே நீங்க அவருக்கு செய்யுற மிகப்பெரிய உதவி...

அடுத்தவன கவுக்குறதுக்கு நீங்க கொடுக்குற ஐடியா உதவி கிடையாது.அடுத்தவன் அடுத்தடுத்த வெற்றி பெற நீங்க கொடுக்குற ஐடியா தான் உதவி.

உதவி பண்ணிட்டு அதை ஊர்ல உள்ள அம்புட்டுபேருக்கும் போஸ்டர் அடிக்காத குறையாக தம்பட்டம் அடிக்காதீங்க ,அதுக்கு நீங்க உதவி பண்ணாமலே இருக்கலாம்.(உ.தா) நம்ம நடிகர்கள் பண்ணுற உதவிகள்.....


கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் அன்பளிப்பு என்ற பெயரில் நம் மக்கள் தங்கள் பெயரையே அந்த அன்பளிப்பு பொருள் மறையுற அளவுக்கு பொறிச்சுருப்பாங்க.....தேவையா இந்த விளம்பரம்......(உ.தா)டியூப்லைட் அன்பளிப்பு கருவேல்னாயக்கன்பட்டி க.மு.கே.கருப்பசாமி....கருப்பு கலர்ல இதுல எங்க வெளிச்சம் தெரியும்?

கல்யாணவீட்டுல நீங்க அளிக்கும் அன்பளிப்பு மணமக்களுக்கு நீங்கள் தரும் பரிசு அன்பு பரிசாய் இருக்கட்டும் வம்பு பரிசாய் வேண்டாம்(உ.தா) உங்க மகனுக்கு நான் ஆயிரம் மொய்யெழுதினேன் நீங்க ஐனூறுதான் எழுதிருக்கீங்கன்னு ஆரம்பிக்கிற சண்டை பெரிய கொலை கேசே ஆயிருக்கு தேவையா வம்பு......முடிந்ததை செய்யுங்கள்......


நீங்கள் செய்கிற உதவி ஒருவரால் மனதாரா வாழ்த்தட்டும் உதட்டால் அல்ல.....

எண்ணி தருவது உதவியல்ல .... நல்ல எண்ணத்தால் தருவதே உதவி.....

ஒருவேளை உணவளித்தாலும் மனதளவால் அளியுங்கள் கையளாவால் அல்ல.....

தேவைப்படும் பொழுது நீங்கள் உதவும் ஒரு ரூபாயும் ஒருகோடிக்கு சமம்.....

தேவையில்லாத பொழுது நீங்கள் அமிர்தமளித்தாலும் அது நஞ்சாக தெரியும்...

கஷ்டத்திலும், நஷ்டத்திலும் துவண்டிருக்கும் ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்.......

இப்போ நீங்க இங்கு அளிக்கும் பின்னூட்டமும்,ஓட்டும் கூட உதவிதான் எழுத பழகிகொண்டிருக்கும் ஒரு சின்ன சிறுமியின் எழுத்துக்கள் மென்மேலும் வெளிவருவருவதற்க்கு.........

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement