காளான் கறி

தேவையானவை


காளான் - 1/4 கிலோ


வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

கடுகு

உப்பு




வதக்கி அரைக்க


சின்ன வெங்காயம் - 20

வரமிளகாய் - 4

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை - 4 சிறிய துண்டுகள்

கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய் துறுவல் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • காளானைக் கழுவி நறுக்கி வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, சோம்பு, கசகசா, பட்டை சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.

  • வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

  • பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

  • இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.

  • அரைத்த விழுதுடன் காளான் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை விடவும்.

  • பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து விட்டு அத்துடன் குக்கரில் உள்ள குழம்பு கலவையையும் காளானையும் சேர்த்து ஒருமுறை கொதிக்க விட்டு இறக்கவும்.
காளான் குழம்பு ரெடி

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement