வெயிட்டிங்


அவளின் வளையல்களின் அசைவாய்
காற்றில் மெல்லிய சங்கீதம்..

அவளின் கண்ணசைவின் கிறக்கங்களாய்
பூக்களின் மெல்லிய கவர்ச்சிகள்..

அவளின் மெல்லிய பேச்சுக்களாய்
வண்டுகளின்.. ர்ர்ர்ரிங்ங்ங்ங்காரம்..

அவளின் மேனியின் நறுமணமாய்
மயக்கும் ரோஜாக்களின் வாசம்..

காலால் மிதிக்க மனம் வராத
காதலியின் கன்னம்போன்று புற்கள்...

அவளின் மெல்லிய நடை போல்
சின்ன மானின் அழகிய நடை..

கொஞ்சவந்தால் ஓடுகிறது அவளை போல்
இந்த பல வர்ண பட்டாம்பூச்சி..

அவளின் நீல சுடிதாரின் நிறம் போல்
வானிலும் அதே நீல நிறம்..

இப்படி அத்தனையும் அவளை பற்றிய
அழகினை சொல்லிக் கொண்டிருக்க..

அவள் மட்டும் இன்னும் வராமல்
காத்திருக்க செய்கிறாள் கள்ளி.

இப்படிக்கு-

பார்க் பெஞ்சில் காதலிக்காக காத்திருந்தவன்.

பாட்டு பாஸ்கி : என்னடா..மச்சி.... பதிவு எழுத எதும் மேட்டர் கிடைக்கலியா...?என்கிட்ட கேட்டா நிறைய சொல்லி இருப்பேன்ல.... சரி வுடு.. கவித(ஜ) நல்லாதான் இருக்கு... ஆனா கும்மி உறுதி.. சொல்லிட்டேன்

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement