விடைதர மறுக்கின்றேன்...

"உன்னோடு மட்டுமே உறவாடிய நினைவுகளள் இந்த நெடிதொடக்கம் உன்னில் இருந்து விலகிச்செல்கின்றன"

விடைதர மறுக்கின்றேன்...

தென்றலின் முகவரி தேடிய என் பயணங்கள்
உன்னிடம் வந்துதான் முடிந்தது என்றுமே-உன்
நினைவுகள் சுமையென கலங்கிய நாட்கள்

நினைத்திடும் போதும் நெஞ்சில் இனித்திடும் இன்றும்
வெறுமனே உன் நினைவுகளை மடடும் நேசித்ததால்
நீ இல்லாத பொழுதுகளும் உன் நினைவுகள்

என் காதலின் சுவடுகளாய் மனதெங்கும்
மனதில் நீ மறைந்திருக்கும் கணங்களும்
புரியாத வேதனை உன்மேல் மீண்டும்
கனக்கிறதே இதயம் உன் நினைவுகளின் சத்தத்தால்
வேண்டாத உணர்வுகளுடன் புகுந்தாய் நீ
என் இதயம் வேண்டுமென்றே ஏற்றுக்கொண்டது
அதையும் உன் காதலுக்காய் மட்டுமே
விலகிச்சென்ற உன்னுடன் கூடவே
விலகிச்செல்லாத நினைவுகளை மட்டும்
விடைதர மறுக்கின்றேன் காதலில்
வேதனையும் சுகங்கள் தான் என்பதனாலா
வில்லங்கம் என்று தெரிந்தும் தினமும்
வீதிகளில் நடக்கின்றேன் உன் நினைவுகளுடன்
விண்ணுலகம் வரவேற்கும் காலம் வரை
காத்திருப்பேன் உன் காதல் நினைவுகளுடன்
கண்ணீருடன் நட்பு வைத்தே...

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement